மலையகம் 200 நடைபயணம்: இலங்கையின் ஏனைய சமூகத்தினரோடு சமமாக வாழ்வதற்கான போராட்டம் - அமெரிக்க தூதுவர்

மலையகம் 200 நடைபயணம்: இலங்கையின் ஏனைய சமூகத்தினரோடு சமமாக வாழ்வதற்கான போராட்டம் - அமெரிக்க தூதுவர்

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையகம் 200 நடைபயணம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று முடிந்த தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனியானது 200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருகை தந்தவர்களை நினைவுகூருவதாக உள்ளது என்பதை தான் நினைத்துப் பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது டுவிட்டர் பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் ஏனைய சமூகத்தினருடன் தாங்களும் சரிசமமாக வாழ்வதற்கான போராட்டத்தை நினைவுகூரும் விதத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு வார நடைபயணி முடிவுக்கு வந்துள்ளது. 

200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக வந்தவர்களை நினைவுகூரும் விதத்திலும் முன்னெடுக்கப்பட்ட நடைபயணத்தில் கலந்துகொண்டவர்களை நினைவில் நிறுத்துகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

US_Malayaha.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image