வறட்சியான காலநிலையால் 132,000 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்

வறட்சியான காலநிலையால் 132,000 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்

வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வெப்பம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியளவு வெப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

ஆகவே அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் வெப்பம் தொடர்பில் அவதானமாக செயற்படுவதுடன், அதிகளவு நீரைப் பருகுமாறும் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, வறட்சி காரணமாக 132,000-இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, வறட்சியால் விலங்குகளின் உடல்நிலை பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image