10ஆவது பாராளுமன்றிற்கு பல தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவு!

10ஆவது பாராளுமன்றிற்கு பல தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவு!

2024 பொதுத் தேர்தலில் தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட தொழில் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்களை, நாட்டு மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்துள்ளனர்.

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவாகியுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மஹிந்த ஜயசிங்க, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் லால்காந்த, அனைத்து நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் வசந்த சமரசிங்க மற்றும் அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கத்தின் சந்தன சூரியஆராச்சி ஆகியோர் உட்பட தனியார் மற்றும் அரச துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image