பிரித்தானியாவுக்கு அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று ஆங்கிலக் கால்வாயின் ப்ரான்ஸ் கலேய்ஸ் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் 5 பெண்களும், ஒரு சிறுமியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகளில் ப்ரான்ஸ் மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டின் பின்னர் கால்வாயில் இடம்பெற்ற அதிகளவான உயிரிழப்பு இதுவாகும் என அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.