பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள விடயம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில், கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
கேள்வி : பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு. எனது நினைவுக்கு எட்டிய வகையில் 2000 ரூபாய் எனக் கூறினீர்கள். தற்போது 1300 ரூபாய் மாத்திரமே கிடைக்கிறது. வாழ்வதற்கு அந்த தொகை போதாது. எமது நாட்டின் பிரஜைகளே அந்த மக்கள். தேயிலை பறிப்பதற்கு மேலதிகமாக சுற்றுலாத்துறையோடும் அவர்கள் தற்போது தொடர்புபடுகின்றனர். எனவே அவர்களுக்கு நியாயம் ஒன்றை அவசரமாக பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை உள்ளதல்லவா?
பதில் : வீழ்ச்சி அடைந்துள்ள நிறுவனங்களும் இருக்கின்றன. இலாபம் அடைகின்ற நிறுவனங்களும் இருக்கின்றன. அதுவே நிலைமை. ஒவ்வொரு பெருந்தோட்ட நிறுவனத் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடுமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கு கூறினேன். கலந்துரையாடலின் பின்னர் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து, அதன் பின்னர் பொதுவான கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்போம் என கூறினேன். கலந்துரையாடலை அவர் ஆரம்பித்து இருப்பார். எனவே, அவர்களுக்கு நியாயமான சம்பளம் ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் (ஏழiஉந ழக pடயவெயவழைn pநழிடந ழசபயnணையவழைn) அமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று (16) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் வாழும் கவனிப்பாரற்ற மக்கள் பிரிவான மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணிஇ வீடுஇ கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
முன்வைக்கப்பட்ட தென் மற்றும் மேல் மாகாணங்களில் வாழும் மலையக மக்களின் அடிப்படை கோரிக்கைகள் அடங்கிய பிரகடனம் தொடர்பில் பிரதமர் இதன்போது விசேட அவதானம் செலுத்தியதுடன் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி மற்றும் தொழில் பயிற்சி வசதிகள் தொடர்பில் நேரடியாக தொடர்புகொண்டு செயற்படுவதாகவும்இ அடிப்படை வசதிகள் மற்றும் காணிஇ வீடு பிரச்சினைகள் தொடர்பில் உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து குறித்த கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தோனி ஜேசுதாசன்இ நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ரவீனா ஹசந்திஇ தேசிய நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ராஜன் உள்ளிட்ட அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.