ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்திற்கான பிரகடனம் 2024

ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்திற்கான பிரகடனம் 2024
இலங்கையில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியானது மக்களின் வாழ்விலும், வாழ்வாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை புதிதாக சொல்லத் தேவையில்லை.
இந்த நிலைமை பலரை அவதானம் மிக்க நிலைக்கு கொண்டுசென்றுள்ளதுடன், ஆட்கடத்தல்காரர்களின் பொய்யான வாக்குறுதிகளுக்கு இரையாக்குகிறது. மனித கடத்தலும் அதன் விளைவுகளும் மறைந்திருக்கும் புற்றுநோய் போன்றது. இது தெளிவான அறிகுறிகளைக் காட்டவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையிலும், அவர்களின் குடும்பங்களிலும், நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது. அபாயகரமான எதிர்மறை விளைவுகள் மிகப்பெரியதாக இருந்தாலும், பிரச்சினையை நாம் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாமலிருக்கும்.
 
மனித கடத்தல் மற்றும் மனித வர்த்தகம் என்பன எப்போதும் ஒரே அர்த்தமாக கருதப்பட்டாலும், அதன் உண்மையான அர்த்தம் மனித கடத்தல் என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆண்டுக்கான 'மனித கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தின்' கருப்பொருள், 'மனித கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் எந்தக் குழந்தையையும் கைவிட்டு விடாதீர்கள்' என்பதாகும். இந்த பாரிய மனித கடத்தலால் பாதிக்கப்படுவது ஒரு நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும் குழந்தைகளே என்பதுதான் அதன் அர்த்தம்.
 
மனித கடத்தல் சர்வதேச குற்றமாக கருதப்படுகிறது. மேலும், குற்றவாளிகளைத் தடுக்கவும், வழக்கு தொடரவும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் நவீன தொழில்நுட்பமும், கடத்தலுக்கு உகந்த சூழலும், ஆட்கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை மிகவும் சிக்கலாக்கியுள்ளதால், அதைக் கையாள்வது மிகவும் கடினமாகியுள்ளது.
 
மனித கடத்தலுக்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றோடொன்று தொடர்புடையது "பாதுகாப்பான புலம்பெயர்வு" (Safe Migrations)  செயல்முறை ஆகும். இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் தொழிலுக்காக புலம்பெயர்பவர்கள் ஆவர். அவர்கள் தேசிய பொருளாதாரத்தில் நேரடியாக சாதக தாக்கத்தை ஏற்படுத்தும் 'பணம் அனுப்புபவர்களாக' இருக்கின்றனர். 'ஆட்கடத்தலை' எதிர்த்துப் போராடுவது 'பாதுகாப்பான புலம்பெயர்வு' செயல்முறையின் இன்றியமையாத பகுதியாகும் என்பதை விளக்க இந்த விடயம் மட்டுமே போதுமானது. எனவே, மனித கடத்தலைத் தடுக்கவும், அதற்குத் தீர்வு காணவும் விரைவான மற்றும் விரிவான நடவடிக்கை தேவை. அதனால்தான் புலம்பெயர்ந்தோர் குரல் (VOM) வலையமைப்பு இந்த மனித கடத்தல் சிக்கலைத் தீர்க்க ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
 
Voice of Migrants Network (VOM) புலம்பெயர்ந்தோர் குரல் வலையமைப்பின்  உறுப்பினர்களான நாங்கள், சக்திமிக்க ஒன்றிணைந்த குழுவாக, ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தில், ஒன்றுபட்டு முன்னிற்குமாறு  அரசாங்கம், பொறுப்புள்ள அரச அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்கள், சமூகத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்களை வலுப்படுத்தல், கடத்தல்காரர்களை திறம்பட விசாரித்தல், வழக்குத் தொடர மற்றும் தண்டனை வழங்கும் திறனை உறுதி செய்வதும் இன்றியமையாததாகும்.
 
குறிப்பிட்ட உதவி சேவைகள், தங்குமிடம் மற்றும் சட்ட உதவி ஏற்பாடுகளை நிறுவுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியமாகும். ஆட்கடத்தலுக்குப் பலியாவதற்கு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் சமூக ஊடகங்களில், "சைபர் குற்றங்களை" எதிர்த்துப் போராடுவதற்கான அமைப்புகள் மற்றும் பொறிமுறைகளை அறிமுகப்படுத்துவது, நிதி நெருக்கடியால் அதிகரிக்கும் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகள் உட்பட, ஆட்கடத்தலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் விரிவான கொள்கைகள் மற்றும் உபாயங்களில் கவனம் செலுத்துவது பொருத்தமானது.
 
முறைசார் மற்றும் முறைசாரா தகவல்தொடர்பு வழிகளைப் பயன்படுத்தி கீழ்மட்டத்தில் இருந்து விழிப்புணர்வுடன் இருத்தல், பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் சங்கங்களை (MS) ஆதரிப்பதும், வலுப்படுத்துவதும் காலத்தின் தேவையாகும். மனித கடத்தலின் அறிகுறிகளைப் பற்றி உங்களைப் போன்ற மற்றவர்களுக்கும் தெளிபடுத்தல், புலம்பெயர்ந்தோரை வலுப்படுத்தல், குறைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான தகவல்கள்; வளங்கள் மற்றும் வலையமைப்புகள் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
 
கூட்டு பேரம்பேசும் ஒப்பந்தங்களில் மனித கடத்தலைத் தடுக்கும் சரத்துகளை உள்ளீர்த்தல், நல்ல தொழில் நிபந்தனைகள் மற்றும் நியாயமான தொழிலாளர் நடைமுறைகளை மேம்படுத்தல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், தொழிலாளர் சுரண்டலைக் கண்டறிந்து அதனை தடுக்க பயிற்சி வழங்குதல், வெளிநாடு சென்றுள்ள மற்றும் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தல், அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து துஷ்பிரயோகங்களையும் தெரிவிக்க அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது அத்தியாவசியமாகும்.
 
இதற்காக ஒத்துழைப்புடன் செயற்பட்டு, மனித கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் செயற்திறனுடன் பங்கேற்குமாறு அரசாங்கம், பொறுப்புவாய்ந்த அரசாங்க அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்கள் சமூகத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
 
புலம்பெயர்ந்தோர் குரல் வலையமைப்பு Voice of Migrants Network (VOM)

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image