2024 இல் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டில் மொத்தம் 312,836 பேர் வேலை வாய்ப்புக்கு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இது கடந்த 2023 ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில், 185,162 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 127,674 பெண் தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
அதிகளாவான தொழிலார்களில் குவைத்துக்கு 77,546 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 51,550 பேரும் சென்றுள்ளனர்.
இதேவேளை, தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை தேடும் இலங்கையர்களின் போக்கு அதிகரித்து வருவதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.
2024 ஆம் ஆண்டில், 7,098 இலங்கையர்கள் தென் கொரியாவிற்கும், 9,665 பேர் இஸ்ரேலுக்கும், 8,665 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளனர்.
இதன் மூலம் கடந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கைக்கு 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ள நிலையில், வெளிநாட்டு ஊழியர்களின் அந்நிய செலாவணி வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஒப்பிடுகையில், 2023 இல் 164,680 ஆண் மற்றும் 132,904 பெண் தொழிலாளர்கள் உட்பட 297,584 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.