முகக்கவசம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவித்தல்

முகக்கவசம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவித்தல்

நேற்று முதல் நாட்டில் உள்ளக மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க போவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

 
கொவிட்-19 நோயின் தாக்கம் நாட்டில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
 
அவ்வாறான பின்னணியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிப்பதானது ஏற்புடைய விடயமல்ல.
 
முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டிருந்த தீர்மானத்திற்கு முழுமையாக இணங்கப்போவதில்லை.
 
கொவிட் தடுப்பூசி செலுத்தல் அதிகரித்தமை, கொவிட் திரிபில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் நோய் அறிகுறிகள் அற்ற நிலை என்பன காரணமாக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
 
சந்தேகத்திற்குரிய இடங்களில், முகக்கவசம் அணிந்து சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்படுகிறது.
 
மக்கள் ஒன்று கூடுதலின் போது சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்ப்பட வேண்டும். 
 
முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என விஞ்ஞானப் பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் வரை அதற்கு இணங்கப் போவதில்லை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image