All Stories

ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது

இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது.

இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம்

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம்

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம் இன்று (17) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் தலைமையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பள உயர்வு: பெருந்தோட்ட தொழிற்சங்கங்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.

கடந்த காலங்களில் மலையக மக்களுக்காக செயற்பட்டார். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும்.

நாடு முழுவதும் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை – கல்வி அமைச்சு

நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் (Voice of plantation people organization) அமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரிப்பு

இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன்.

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்!

கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு இன் விசேட அறிவித்தல்

தமது ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட IMEI இயங்கு சாதனங்களை மட்டுமே கொள்வனவு செய்யுமாறு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

போலி வைத்தியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் அதனைச் சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்துக்கோ அல்லது வேறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கோ பொதுமக்கள் அறிவிக்க முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறை

அரசாங்க ஊழியர்களின் சேவைக் காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் பணிகளில் ஈடுபடுவதற்காக சம்பளம் அற்ற விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் - ஊடகத்துறை அமைச்சர்

கடந்த காலங்களில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களை அவதானமாக கையாளுமாறு விசேட அறிவித்தல்

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு புதிய குடை அறிமுகம்

தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை ஒன்றை அறிமுகப்படுத்த ஹொரண தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டோக்ஹோம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, நடவடிக்கை எடுத்துள்ளது.

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image