ஒரு தீபத்திலிருந்து மற்றொரு தீபம் ஒளி பெறுவதைப் போல, ஒரு நல்ல சிந்தனை மற்றொரு உள்ளத்திலும் நம்பிக்கையையும் ஒளியையும் விதைக்க வல்லது.
தீபாவளி என்பது ஒரு நாடு, ஒரு தேசம் அல்லது ஒரு மதத்திற்குச் சொந்தமான பண்டிகை மட்டுமல்ல. மனிதநேயம், அன்பு, நல்லிணக்கம் மற்றும் நன்மையின் மீது நம்பிக்கை கொண்ட உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒளியின் திருவிழாவாகும்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயத்தில் ஏற்றப்படும் தீபமாக இருந்தாலும், கொழும்பில் ஒரு இல்லத்தில் ஒளிரும் விளக்காக இருந்தாலும், துபாயில் ஒரு அறையிலும், லண்டனில் ஒரு வீட்டிலும், டொராண்டோவில் ஒரு மண்டபத்திலும் ஏற்றப்படும் தீபங்களாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே உணர்வையும் ஒரே மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கின்றன.
தாய்நாட்டை விட்டு வெகுதொலைவில் வாழ்ந்தாலும், தமது உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் எமது நாட்டின் வளர்ச்சிக்கும் வலுச்சேர்க்கும் எமது சகோதர சகோதரிகள் ஏற்றும் தீபங்கள், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டின் மீதான பற்றும் பாசமும் அவர்களின் இதயங்களில் என்றும் அணையாது ஒளிர்கின்றன என்பதை உணர்த்துகின்றன.
இன்று நீங்கள் ஏற்றும் ஒவ்வொரு தீபமும் உங்கள் இல்லத்தின் இருளை மட்டுமன்றி, அயலவர்களின் உள்ளங்களிலும் ஒளியேற்றட்டும். அந்த ஒளி எமது நாட்டின் எல்லைகளைக் கடந்து, உலகெங்கும் அன்பையும் அமைதியையும் நம்பிக்கையையும் பரப்பிடட்டும்.
இலங்கை மக்கள் அனைவருக்கும், உலகெங்கும் வாழும் அனைவருக்கும் ஒளிமயமான, அமைதியும் நம்பிக்கையும் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்
விஜித ஹேரத்
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
