தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் இன்று(12) நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
All Stories
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பள முறைமை மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயமான வருமானம் - இலாபம் கிடைக்ககூடிய வகையில் புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு காண்பது சாத்தியப்படாதென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வற் வரி (Vat Tax) திருத்தச் சட்டமூலம் இன்று(11) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்துள்ளார்.
நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை முதலீட்டு திட்டமொன்றுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
பாடசாலை தரங்களை 13 இலிருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிவு – உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவிப்பு
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் வடக்கு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க சம்மேளனத்தினர் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.