அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முதலாவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சையில் தமிழ் மொழி வினாத்தாளில் சிங்கள மொழியில் தரவுகள் வழங்கப்பட்டமையால் பரீட்சார்த்திகள் சிரமங்களை எதிர் கொண்டதுடன், இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளனர்.
All Stories
கடனைத் திருப்பிச் செலுத்த 2028 வரை சலுகைக் காலம்.
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டசொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான திருத்த சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சேவை யாப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (01) இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கம் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.