ஈரானிடமிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக செலுத்தப்படவேண்டிய கடன் தொகையில், தேயிலையில் விற்பனை மூலம் இதுவரையில், 55 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.
கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, சீன மற்றும் ஜப்பானிய மொழிகளை கற்பிக்க 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வேலைநிறுத்தத்தின்போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம். எம் மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
தமது பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்று (15) நிறைவுக்கு வந்துள்ளது.
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போது காணப்படும் தோட்ட வீடுகள் மற்றும் லயின் அறைகளை ஒன்றிணைத்து கிராமங்களாக மாற்றுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் இன்று (15) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேலைநிறுத்தம் காரணமாக நாட்டுக்கு வருமானம் கிடைக்காவிட்டால் சம்பளம் வழங்க முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை கடிதத்திற்கு இலங்கை ரயில் நிலைய அதிபர் சங்கம் பதிலளித்துள்ளது.