
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் (21) இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வமாக மாத்திரமன்றி நடைமுறையிலிரும் வங்குரோத்தடைந்த நாடே எமக்கு கிடைத்தது. அதேபோல் எமது வரவு செலவிற்கிடையில் 2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட ஆவணத்தை எடுத்துக்கொண்டால், எமது மொத்த பொருளாதாரத்தில் 4990 பில்லியன்களை எதிர்பார்க்கும் போது, எமது வட்டியை செலுத்த 2950 பில்லியன்கள் தேவைப்படுகிறது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 1352 பில்லியன்கள் தேவை.
ஓய்வூதியம் வழங்க 442 பில்லியன்கள் தேவை. மொத்த வருமானம் 4990 வட்டி, அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் வழங்க 4744 பில்லியன்கள் 256 பில்லியன்கள் மட்டுமே எஞ்சும்.
அடுத்த பாரிய பிரச்சினை அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலானது. நாம் அரச சேவையிலிருக்கும் இரண்டு பிரச்சினைகளை அறிந்துகொண்டிருக்கிறோம். சிறந்த தொழில்வான்மை மிகுந்த அரச ஊழியர்கள் நாட்டை விட்டுச் செல்லும் நிலைமை காணப்படுகிறது. நல்லதொரு தொழில் இயலுமை மிக்கவரை அரச சேவைக்குள் உள்வாங்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
எமக்கு அது தொடர்பிலான இயலுமை கொண்ட அதிகாரிகள் குழுவை அரச சேவைக்குள் ஈர்த்துக்கொள்ள முடியாமல் உள்ளது. அரச சேவையின் சம்பளம் மிகக் குறைவான மட்டத்தில் இருந்தது. அதனால் நாட்டை விட்டுச் செல்லல் மற்றும் இயலுமை மிக்கவர்களை அரச சேவைக்குள் உள்ளீர்ப்பது மந்த நிலையில் காணப்பட்டது. அதனால் நாம் இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் நல்லதொரு அதிகரிப்பை செய்ய வேண்டுமென நினைத்தோம். அதனை செய்திருக்கிறோம். ஊழியர்களும் இவ்வாறான அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை.போராடி கேட்கவும் இல்லை. அடிப்படைச் சம்பளம் தொடர்பில் கலந்துரையாடல் மட்டுமே இருந்தது.ஆனால் அறிவியல் முறையில் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை எடுத்தோம். அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறோம். விடுமுறை நாட்களில் பணியாற்றுவோருக்கு கிடைக்கும் கொடுப்பனவின் அளவை. அடுத்ததாக வருடாந்த சம்பள அதிகரிப்பை பற்றி ஒருபோதும் கலந்துரையாடலொன்று இருக்கவில்லை. மிகக் குறைந்த சம்பள அதிகரிப்பு விகிதமே காணப்பட்டது. நாங்கள் அதனை 80% சதவீதத்தினால் சம்பள உயர்வை வழங்க தீர்மானித்தோம். அதிகரித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பாரிய பிரச்சினை ஒன்று இருந்தது. தமது சம்பளத்தில் தம்மால் தாங்கிக்கொள்ள முடியாத வரி விதிக்கப்பட்டது. ஒரு இலட்சம் என்ற வரி வரம்பை ஒன்றரை இலட்சமாக அதிகரித்தோம். ஒன்றரை இலட்சம் சம்பளம் எடுப்பவர் முழுமையான வரியிலிருந்து விடுவிக்கப்படுவார். இந்த அனைத்தினாலும் நாம் வினைத்திறனான அரச சேவை ஒன்றிணையே எதிர்பார்க்கிறோம்.
மறுமுனையில் அரசியல் அதிகார தரப்பு என்ன செய்கிறது. நான் ஜனாதிபதியானவுடன் எம்.பிக்கான ஓய்வூதிய சம்பளம் எனக்கு கிடைக்கிறது. முன்பிருந்தவர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஜனாதிபதி சம்பளத்திற்கு மேலதிகமான எம்.பிக்கான கொடுப்பனவும் எனக்கு கிடைக்கிறது. எம்.பிக்கான ஓய்வூதியம் எனக்கு வேண்டாமென இன்று கடிதம் கொடுத்திருக்கிறேன். நாட்டை திருத்த ஆரம்பிக்க வேண்டும். எம்.பிக்கள் ஜனாதிபதியான பின்னர் அவர்களுக்கு எம்.பிக்களுக்கான ஓய்வூதியமும் கிடைக்கும். உண்மையாகவே நான் இவ்வாறு கிடைக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை. அறிந்துகொண்ட உடனேயே பாராளுமன்றத்திற்கு எனக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்று கடிதம் கொடுத்திருக்கிறேன்.
அதேபோல் அமைச்சர்கள் எம்.பிக்களுக்கும் அமைச்சர்களுக்கும். எம்.பி அமைச்சரவானவுடன் எம்.பியின் சம்பளமும் கிடைக்கும் அமைச்சரின் சம்பளமும் கிடைக்கும். இவ்வாறுதான் அனுபவித்திருக்கிறார்கள்.
எமது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் எம்.பிக்களுக்கான சம்பளத்தை மட்டுமே பெறுவர் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். நாட்டை திருத்த நியாயமாக செயற்பட வேண்டும். அந்த அர்ப்பணிப்பை நாங்கள் செய்திருக்கிறோம். இந்த நாட்டை மாற்ற இந்த அரசியலும் மாற வேண்டும். எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வோம் அதற்கான சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவோம். ஜனாதிபதியின் வரப்பிரசாத சட்டத்தை திருத்தம் செய்வோம். அந்த சட்டமும் மிக விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும். பாராளுமன்றத்தில் அனைவரும் இணைந்து கை உயர்த்தக்கூடிய சில சட்டங்கள் விரைவில் கொண்டு வருவோம்.