சவுதியில் அதிகரிக்கும் வெப்பநிலை- பொது மக்களுக்கு எச்சரிக்கை

சவுதியில் அதிகரிக்கும் வெப்பநிலை- பொது மக்களுக்கு எச்சரிக்கை

சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியம் உட்பட பல பிரதேசங்களில் வெப்பநிலை மிக அதிகமாக உள்ளதாக அந்நாட்டு வானிலை அவதானநிலையம் எச்சரித்துள்ளது.

தமாமில் 48 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் சவுதி அரேபிய கிழக்கு மற்றும் ரியாத் பிரதேசங்களில் அதிக கூடிய வெப்பநிலையுடன் தூசியுடன் கூடிய காற்றும் வீசுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றமையினால் பொது மக்கள் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறும் அந்நாட்டு தேசிய வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

இந்நிலை இவ்வார இறுதி வரை தொடரும் என்றும் கிழக்கு மாகாணத்தில் வெப்பநிலையானது 50 செல்ஸியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும் சவுதியின் பல பிரசேதங்களில் இந்நிலை காணப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையைக் கருத்திற்கொண்டு வாகனங்களில் கூளிங் பேப்பர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதியில் 30 சதவீத தடிப்பத்தைக்கொண்ட கூளிங் பேப்பர்களுக்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவிர்க்க முடியாத காரணங்களினால் அதனை விட அதிக தடிப்பத்தைக் கொண்டு கூளிங் பேப்பர்களை பயன்படுத்துவதாயின் அதற்கான மருத்துவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட தடிமனை விடவும் அதிகமான தடிமனை கொண்ட கூளிங் பேப்பர்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு 500 தொடக்கம் 900 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image