பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
 
இதன் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக  பல்கலைக்கழக தொழிற்சங்ககளின் ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர்  தம்மிக்க எஸ் பிரியந்த தெரிவித்தார்.
 
அரசாங்கத்துடன் ஏழு வருடங்களாக கலந்துரையாடியுள்ளதோடு, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை, அந்த அறிக்கைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
அரசாங்கம் இதனை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் இதுவரை தீர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளமை, கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை ஆகிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image