சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்றாகும்.
All Stories
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.
தொழிலின்மை, நிலையற்ற சம்பளம், நிலையற்ற தொழில்கள், பொருளாதார மந்தநிலை போன்றவற்றினால் மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் அரசாங்கம் சட்ட சீர்த்திருத்த முன்மொழிவை முன்வைத்துள்ளது என்று பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பால்நிலை சமத்துவத்தை சமூக அபிவிருத்திக்கான ஒரு குறிக்காட்டியாக பார்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தின் பேராசிரியர் சிவானி சண்முகதாஸ் தெரிவித்துள்ளார்.
சுமார் 100 ஆண்டுகால பழமையான தொழிலாளர் சட்டங்களைத் திருத்தியமைத்து, அதன் மூலம் நவீன தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் தொழிற்சட்டம் கொண்டுவரப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு 20,000 சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
செயற்கை நுண்றிவின் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அது வேலையின்மைக்கு வித்திடுவதாக வாத விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.
இன்று சர்வதேச வீட்டுப் பணிப் பெண்கள் தினமாகும்.
தொழிலாளர் சட்ட மறுசீமைப்பு சமகாலத்தில் இலங்கையின் மிக முக்கிய பேசுபொருளாக உள்ளது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு வரைவுக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கைளையும் முன்னெடுத்து வருகின்றன. தலைநகர் கொழும்பிலும், நாட்டின் ஏனைய சில பாகங்களிலும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
"இலங்கையில் இருக்கின்ற அனைத்து பொதுமக்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் ஆசிரியர்கள் என எல்லோரும் உத்தேச தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பை எதிர்த்து போராடி, அதனை நிராகரிக்கின்ற ஒரு செயற்பாட்டில் உடனடியாக இறங்க வேண்டிய தேவை இருக்கின்றது.", என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பொருளாதார நிபுணருமான கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது.
Sous-catégories
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
