
ஊழியர் சேமலாப நிதியத்தைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பாதுகாப்பதற்குமான அவசர வேண்டுகோளை பிரதான ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைத் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் முன்வைத்துள்ளது.
கீழே கையொப்பமிட்டுள்ள உறுப்பினர்களாகிய நாம், இலங்கையில் தொழிற்சங்கங்களின் பரந்த கூட்டணியை பிரதிநிதித்துவம் செய்கிறோம். ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) மீதாான சுரண்டல் மற்றும் தவறான முகாமைத்துவம் குறித்து உங்களுக்கு எழுதுகிறோம்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண 5 குறிப்பிட்ட பரிந்துரைகளை நாங்கள் முன்வைக்கிறோம். இந்த பரிந்துரைகள் பற்றிய நிலைப்பாட்டை உடனடியாக பகிரங்கப்படுத்துமாறு அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
ஊழியர் சேமலாப நிதியில் (EPF) திரட்டப்படும் சேமிப்பானது, தொழிலாளர்கள் தங்கள் மொத்த மாதச் சம்பளத்தில் 20% சேமிக்க வேண்டும் என்று அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சட்டப்பூர்வ தேவையின் நேரடி விளைவாகும். இந்த கட்டாயப் பங்களிப்பு, ஊழியர்களின் வருவாயின் ஒரு பகுதியை தவறாமல் நிதியில் வைப்பு செய்யப்படுவதை உறுதிசெய்கிறது, காலப்போக்கில் இது கணிசமான இருப்பை உருவாக்குகிறது. எனவே, ஊழியர் சேமலாப நிதியம் என்பது தொழில் வர்க்கத்தின் ஓய்வூதிய சேமிப்பின் முதன்மை வடிவமாகும், இது அவர்களின் நீண்டகால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மத்திய வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல்களால் ஊழியர் சேமலாப நிதியம் சமரசம் செய்யப்பட்டுள்ளதாக தடயவியல் கணக்காய்வுகள், பாராளுமன்ற விசாரணைகள் மற்றும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இது இலங்கைத் தொழிலாளர்களுக்கு பாதகமான, நிலையூன்றிய நலன்கள் மற்றும் உயர்குடி வர்க்கத்தினருக்கு ஆதரவாக அதன் நிர்வாகத்தால் பயன்படுத்தப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதியத்தைப் பாதுகாப்பது வாக்காளர்கள் மிகவும் ஆழமாக அக்கறை செலுத்தும் ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
ஊழியர் சேமலாப நிதியத்தைப் பாதுகாப்பதற்காக கீழே எம்மால் முன்மொழியப்பட்டுள்ள ஐந்து செயல் உருப்படிகளுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்த உங்கள் எழுத்துமூலமான பதிலைக் கோருகிறோம். இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பாக உங்கள் பதிலுடனோ அல்லது பதில் இல்லாமையையோ பகிரங்கமாக வெளியிட விரும்புகிறோம் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.
இக்கடிதத்திற்கான உங்களது பதிலை Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் அல்லது சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை தொழிலாளர் சங்கம், இலக்கம் 141, ஆனந்த ராஜகருணா மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கோரப்பட்டுள்ள ஐந்து நடவடிக்கைகள்:
1. ஊழியர் சேமலாப நிதி மீதான நியாயமற்ற வரிவிதிப்பை நீக்குதல்.
காரணம்: 1958 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட EPF, முதலில் 1989 ஆம் ஆண்டு முதலீட்டு வருமானத்தில் 10% வரி அறிமுகப்படுத்தப்படும் வரை கட்டாய வரி அற்ற சேமிப்பாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில், இது 14% ஆக அதிகரித்தது. பெரும்பாலும் நிகர வருமானம் மற்றும் குறைந்த விகிதங்களில் வரி விதிக்கப்படும் நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இது EPF இல் முதலீடு செய்வதை குறைவான கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. 2018 மற்றும் 2022 க்கு இடையில், EPF அதன் மொத்த வருமானத்தில் சராசரியாக 13.7% வரிகளாக செலுத்தியது, அதே நேரத்தில் வங்கிகள் 8.0% மட்டுமே செலுத்தின. இந்த வரிச்சுமை குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு குறிப்பாக பாதகமானது, அவர்களின் சேமிப்பு வருமானங்கள் தனிப்பட்ட முறையில் சேமிக்கப்பட்டால் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும், இது EPF மீதான இந்த வரிகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், EPF க்கு பங்களிப்பது கட்டாயமாக இருப்பதால், அவர்களுக்கு வேறு வழியில்லை.
2. ஊழியர் சேமலாப நிதிய கொடுக்கல் வாங்கல்களில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக ஊழியர் சேமலாப நிதிய திருத்த சட்டமூலத்தை[1] பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதல்
காரணம்: நடைமுறையில் இருக்கும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் 5(1)(h) பிரிவு, வருடாந்த அறிக்கையில் முதலீட்டுத் தகவல்களை அமைச்சருக்கு வெளிப்படுத்துமாறு நாணயச் சபையைக் கட்டாயப்படுத்துகின்றது. எவ்வாறாயினும், மத்திய வங்கியின் கீழ் உள்ள ஊழியர் சேமலாப நிர்வாகம் இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தம் ஊழியர் சேமலாப நிதிய தகவல்களுக்கான சுருக்கமான மற்றும் வழக்கமான வெளிப்படுத்தல் தேவைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது நிதி பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும் தொழிலாளர்களின் சேமிப்பைப் பாதுகாப்பதற்கும் உறுப்பினர்களுக்கு போதுமான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.[SG1]
3. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை ஊழியர் சேமலாப நிதிய பங்குச் சந்தை கொள்வனவுகளை நிறுத்துதல்
காரணம்: இலங்கை மத்திய வங்கியானது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான தீர்மானம் நிதியத்திற்கு பாதகமாக இருந்துள்ளதுடன், பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு வழங்கப்பட்ட அடிப்படைக் காரணங்கள் பகுப்பாய்வு ரீதியாக பிழையானவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. 25 ஆண்டு காலப்பகுதியில் (1994 - 2019) பங்குச் சந்தையில் ஒட்டுமொத்த வருமானம் ஒரு வருட அரசாங்க பங்குரிமைச்சான்றிதழ்களிலிருந்து கிடைத்த வருமானத்தில் பாதிக்கும் குறைவாகவே இருந்தது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.[2]1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பங்குச் சந்தையில் ஊழியர் சேமலாப நிதியமத்தில் 9,859 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தடயவியல் கணக்காய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.
4. போதுமான வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் வரை ஊழியர் சேமலாப நிதியத்தின் இரண்டாம் நிலை சந்தை முறி கொடுக்கல் வாங்கல்களை நிறுத்துதல்
காரணம்: பிணைமுறிச் சந்தை போன்ற இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதற்கு ஊழியர் சேமலாப நிதியங்களைப் பயன்படுத்துவதில் இலங்கையின் அனுபவம் கணிசமான இழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. 2002 ஜனவரி 1 முதல் 2015 பெப்ரவரி 28 வரை பிணைமுறி சந்தையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் மொத்த இழப்புக்கள் கிட்டத்தட்ட 10 பில்லியன் ரூபாய்கள் (ரூ. 9,826 மில்லியன்) என்பதை தடயவியல் கணக்காய்வுகள் நமக்குக் காட்டுகின்றன. அரசாங்கக் கடன்கள் தனியார் சந்தைகளுக்கு விற்கப்பட்ட விலைகளை விடக் குறைவான விலைக்கு சந்தைக்கு வெளியே கொள்முதல் செய்யப்பட்டதே இதற்குக் காரணமாகும். பரிவர்த்தனை விவரங்களை பகிரங்கப்படுத்த தற்போதைய EPF நிர்வாகம் தவறியது பொதுமக்களின் நம்பிக்கையை அரித்து, உறுப்பினர்களின் ஓய்வூதிய பாதுகாப்பை சமரசம் செய்துள்ளது. முன்மொழியப்பட்ட EPF திருத்தமானது, முறி பரிவர்த்தனைகள் வெளியிடப்படுவதை உறுதி செய்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது.
5. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் தடயவியல் கணக்காய்வு நடத்த பணிப்பாணை விடுத்தல்
காரணம்: 2002 ஜனவரி முதல் 2015 பெப்ரவரி வரையிலான முறி சந்தை பரிவர்த்தனைகள் மற்றும் 1998 முதல் 2017 வரை பங்குச் சந்தை பரிவர்த்தனைகளை மட்டுமே உள்ளடக்கிய தடயவியல் கணக்காய்வுகளின் நோக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது. பூர்த்திசெய்யப்பட்ட தடயவியல் கணக்காய்வுகள் EPFஇல் தவறான நிர்வாகத்தை சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியுள்ளன. ஆனாலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தாவிட்டால், ஊழியர் சேமலாப நிதியம் மேலும் துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயம் உள்ளது. பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் எதிர்கால தவறான நிர்வாகத்தைத் தடுப்பதற்கும், ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் EPF பரிவர்த்தனைகளின் வழக்கமான தடயவியல் கணக்காய்வுகளை நடத்துவது கட்டாயமாகும்.
தொழிலாளர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த ஓய்வூதிய சேமிப்புகள் சுயநல நலன்களுக்காக சுரண்டப்படுவது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயலாகும் மற்றும் மாபெரும் ஊழலின் தெளிவான அறிகுறியாகும். எங்களின் கவலைகள் தீவிரமாக இருந்தபோதிலும், மத்திய வங்கியினதும் நிதி அமைச்சினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கான எம்மால் நடத்தப்பட்ட முறையான தொடர்பாடல்கள் போதிய பதில்களைப் பெற்றிருக்கவில்லை. எங்கள் கோரிக்கைகள் ஏன் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பதற்கான பகுத்தறிவு விளக்கங்களை வழங்க அவர்கள் தவறிவிட்டனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், ஊழியர் சேமலாப நிதியத்தைப் பாதுகாப்பதற்கான திருத்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். அரசியல் கட்சிகள் இந்த விடயத்தை எவ்வாறு கையாளுகின்றன என்பதை முன்னிலைப்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம், அவர்களின் பதில்கள், நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, முழுமையாக ஆராயப்படுவதை உறுதிசெய்வோம்.
EPF ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தில் இருந்து பாதுகாப்பதற்கான எங்களால் முன்மொழியப்பட்ட ஐந்து நடவடிக்கைகளுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா என்பதைக் குறிக்கும் எழுத்துப்பூர்வ பதிலை அவசரமாக கோருகிறோம். அல்லது எமது முக்கிய முன்மொழிவுகளை உங்களால் ஆதரிக்க முடியாவிட்டால், உங்கள் நிலைப்பாட்டிற்கான விரிவான விளக்கத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது வெறும் கொள்கைப் பிரச்சினை மட்டுமல்ல; இது தங்கள் ஓய்வூதிய பாதுகாப்பிற்காக ஊழியர் சேமலாப நிதியத்தை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான இலங்கை தொழிலாளர்களின் நிதி எதிர்காலம் மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பது பற்றியதாகும்.
தங்கள் உண்மையுள்ள,
EPF தவறாக நிர்வகிக்கப்பட்டு சுரண்டப்பட்ட மூன்று முக்கிய நிகழ்வுகள் இங்கே:
1. உள்நாட்டுப் போருக்குப் பின்னர், 2009 இல், இலங்கை பங்குச் சந்தை 2010 இல் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட பங்குச் சந்தையாக மாறியது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 2009 இல் 125% இனாலும் 2010 இல் 96% இனாலும் அதிகரித்தது. இருப்பினும், பங்குச் சந்தையில் EPF முதலீடுகளின் வருமானம் கணிசமாகக் குறைவாக இருந்தது, 2009 இல் 3.73% மற்றும் 2010 இல் 4.20% மட்டுமே இலாபம் கிடைத்தன.[3]
2. 2015 பிணைமுறி மோசடிக்கு பதிலளிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு, ஊழியர் சேமலாப நிதியம் கிட்டத்தட்ட 20 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாக வெளிப்படுத்தியது. எவ்வாறாயினும், தடயவியல் கணக்காய்வுகள் 2015 பெப்ரவரிக்கு முந்தைய காலப்பகுதியை மட்டுமே உள்ளடக்குகின்றன மற்றும் 2015 பெப்ரவரியில் பிணைமுறி மோசடியைத் தொடர்ந்து முறி சந்தையில் ஏற்பட்ட இழப்புகளை உள்ளடக்குகின்றன. இவ்வாறு தடயவியல் கணக்காய்வு மக்களின் ஓய்வூதிய சேமிப்பின் நிதி சேதத்தை முழுமையாக கணக்கிடத் தவறிவிட்டது.
3. இலங்கையின் அண்மையகால உள்நாட்டு திறைசேரி முறி மறுசீரமைப்பு பிரத்தியேகமாக ஓய்வு பெறும் நிதியங்களை இலக்கு வைத்தது ஆரம்பிக்கப்பட்டது[4]. இதன் அர்த்தம், வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் போன்ற ஏனைய அனைத்து நிதி நிறுவனங்களும் தனிநபர்களும் விலக்கப்பட்ட அதேவேளை, அவர்களும் 33% வரை இலாபங்களை அனுபவித்த அதேவேளை, மறுசீரமைப்புக்கான செலவுகளை சாதாரண தொழிலாளர்கள் ஏற்க வேண்டும் என்பதாகும். இந்த அணுகுமுறை நன்மைகளை தனியார்மயமாக்குகிறது மற்றும் செலவுகளை நியாயமற்ற முறையில் சமூகமயமாக்குகிறது, இது மக்களின் ஓய்வூதிய பிணைவைப்புகளை நியாயமற்ற முறையில் பாதிக்கிறது.