கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR மாபியா?

கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR மாபியா?

விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள ஆய்வகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வது தற்போது குறைவடைந்துள்ளதாக மருத்துவ இரசாயண பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள ஆய்வகத்தில், சர்வதேசத்திற்கு ஏற்ற வகையிலான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக பி.சி.ஆர் பரிசோதனை கொள்ளளவை 4,500 வரையில் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிஸ்டவசமாக, சுகாதார அமைச்சின் கொள்கைகளை தீர்மானிப்பவர்களினால்,  விமானப் பயணிகளுக்கு எந்த ஒரு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளாத ஆய்வகமாக இந்த ஆய்வகம் மாற்றப்பட்டுள்ளது.

விமானப் பயணிகளின் அனைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளையும், தனியார் ஆய்வகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணி ஒருவரிடமிருந்து ஒரு பி.சி.ஆர் பரிசோதனைக்காக 50 டொலருக்கும் அதிகமான பணம் அறவிடப்படுகின்றது.

இந்தப் பாரிய அளவான பணத்தை கணக்கிட்டால், நாட்டிள்ள பணியாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் பிசிஆர் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொண்டு, இந்த ஆய்வகத்தை அரசாங்கத்திற்கு   சுமையாகாத வகையில் கொண்டு நடத்தக்கூடிய பணத்தை இதனூடாக ஈட்டிக்கொள்ள முடியும்.

ஆனால் இங்கு இடம்பெறும் நடவடிக்கைகளின் மூலம் வெவ்வேறு தரப்பினரின் நண்பர்களே இறுதியில் பயனடைவதாக மருத்துவ இரசாயண பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image