கத்தாரில் பாதசாரிகளுக்கான எச்சரிக்கை: 500 றியால் வரை அபராதம்

கத்தாரில் பாதசாரிகளுக்கான எச்சரிக்கை: 500 றியால் வரை அபராதம்

கத்தாரின் பாதைகளில் உள்ள உரிய பாதசரிக் கடவைகளைப் பயன்படுத்தாமல் விரும்பிய இடங்களால் பாதைகளைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கத்தார் குடி மக்கள் இது தொடர்பாக பிரசாரத்தை ஆரம்பிக்கும் படி அழைப்பு விடுத்துள்ளதாக கத்தார் செய்தி நாளிதழான அல் ராயா தெரிவித்துள்ளது.

சல்வா வீதி, செனயா வீதி, வடக்கு வீதி மற்றும் முக்கிய அதிவேக வீதிகளில் கூட பாதசாரிகள் ஒதுக்கப்பட்ட உரிய இடங்களால் கடக்காமல் வாகனங்களுக்கு முன்னால் ஆபத்தான முறையில் கடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல பாதசாரிகள் பாதசாரி சுரங்கப்பாதைகள் இருந்தும், அதனைப் பயன்படுத்தாமல் பாதை வேலிகளுக்கு மேலால் ஏறிப் பாய்ந்து கடப்பதாக அல் ராயா புகைப்படக் கலைஞரொருவர் தெரிவித்துள்ளார்.

அபராதங்களி விபரம்.

1. சாலைகளின் விளிம்பில் நடப்பது, அல்லது சைக்கிள்களுக்கு ஒதுக்கப்பட்ட தடங்களில் நடப்பது, அல்லது பாதைசாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட திசையில் நடக்காமல் இருத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டால் 100 றியால்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

2. பாதையைக் கடக்கும் போது முன்னெச்சரிக்கையுடன் செயல்படத்தவறி பிடிபட்டால் 200 றியால்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

3. பாதசாரி போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு கட்டுப்படாமல் இருந்தால் 500 றியால்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பதாக அல் ராயா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம் : கத்தார் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image