பிசிஆர் எதிர்மறையானால் 14 தனிமைப்படுத்தல் இல்லை

பிசிஆர் எதிர்மறையானால் 14 தனிமைப்படுத்தல் இல்லை

வௌிநாடுகளில் பணிபுரிந்து மீள நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இறுதியாக செய்யப்படும் பிசிஆர் பரிசோதனை எதிர்மறையாக இருப்பின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இருப்பது அவசியமில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுவாக நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமானநிலையத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அரசாங்கம் நிர்வகிக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அல்லது ஹோட்டல்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள். அவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்தவர்களுக்கு மறுபடியும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு எதிர்மறையாக இருப்பின் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் வீடகளிலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். நேர்மறையானவர்கள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். எனினும் இனிவரும் காலங்களில் பிசிஆர் பரிசோதனை எதிர்மறையாக இருப்பவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட தேவையில்லை

இவ்விடயம் தொடர்பான விசேட அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிடுவார் என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image