தூதரக சேவைகளுக்காக 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - வௌிவிவகார அமைச்சு
கொவிட் 19 தொற்று காரணமாக வௌிநாடுகளில் உள்ள 42 தூதரக சேவைகளுக்கு 10 கோடி ரூபா நிதி ஒதுக்க வௌிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே இந்நிதியில் 7 கோடிக்கும் அதிகமான நிதி வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்க செலவிடப்பட்டுள்ளது என்றும் அதில் அதிக தொகை கட்டாரின் டோஹா நகதில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் செலவிட்டுள்ளது என்றும் அத்தூதரகம் 42, 25,000 ரூபா நிதியை செலவிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சுமார் 40,53,000 ரூபா நிதியை ஓமானுக்கான இலங்கை தூதரகமும் 340,000 ரூபா நிதியை டுபாய் இலங்கை கொன்சியுலர் அலுவலகமும் அந்நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்காக செலவிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.