தாதியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

தாதியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

சுகாதாரத்துறையில் நிலவும் தாதியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக புதிய ஆட்சேர்ப்புக்காக 02 வர்த்தமானி அறிவித்தல்கள் வெள்ளிக்கிழமை (18) பிரசுரிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதாரத்துறையில் நிலவும் தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் பொருட்டு புதிய ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் இருந்து 2650 பேரையும், 850 தாதியர் பட்டதாரிகளையும் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

மருத்துவ துறையில் தாதியர் சேவை தீவிரமடைந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் 33 பிரதேச வைத்தியசாலைகளில் ஒரு தாதியர்கள் கூட இல்லை. தற்போது தான் நியமனங்கள் வழங்கப்படுகிறது.

2020,2021 மற்றும் 2022 ஆகிய காலப்பகுதிகளில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 2650 பேரை தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் (18) பிரசுரிக்கப்படும். ஆகவே தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

இதற்கு மேலதிகமாக 850 தாதியர் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெள்ளிக்கிழமை (18) பிரசுரிக்கப்படும் என்றார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image