தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உதவிப் பணிப்பாளர் காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது போன்ற சம்பவங்கள் குறித்து 1950 எனும் இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை தவிர, 0112 542 104, 0112 334 728 மற்றும் 0112 235978 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கும் அழைத்து தகவல்களை வழங்க முடியும்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காயத்ரி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
மூலம் - நியூஸ்பெஸ்ட்