மின்சாரசபை ஊழியர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

மின்சாரசபை ஊழியர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

மின்சாரசபையை விற்பனை செய்வதற்கு எதிராக இன்று (21) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நன்பகல் 1.00 மணிக்கு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டு எதிர்கால செயற்பாடு தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் என்று சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்க ஒன்றியம் இன்று நன்பகல் ஒரு மணிக்கு விகாரமாதேவி பூங்கா திறந்த அரங்கில் பாரிய தொழிற்சங்க எதிர்ப்புக் கூட்டம் முன்னெடுக்கப்படும். இலங்கை மின்சாரசபையை மீள்கட்டமைத்து 13 நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. மீள்கட்டமைப்பு என்ற பேரில் மின்சாரசபை போன்ற பாரிய நிறுவனமொன்றை தேசிய பாதுகாப்பை கருத்திற்கொள்ளாது வௌிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பது பாரதூரமான விடயமாகும்.

அச்சட்டமூலத்தின் உள்ளடக்கத்தினைப் பொறுத்து தேவைப்பட்டால் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பான முன்மொழிவு இன்றைய கூட்டதில் நிறைவேற்றப்படவுள்ளது. இலங்கை மின்சாரசபையின் அத்தியவசிய பாதிப்பு மற்றும் மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் சுகயீன விடுமுறை பெற்று இன்று விகாரமாதேவி பூங்காவில் கூடவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image