டெஸ்போட் வெளிக்கள உத்தியோகத்தருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
நுவரெலியா நானுஓயா - டெஸ்போட் தோட்டத்தின், சீனிகத்தால பிரிவில் தொழிலாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒனறு முன்னெடுக்கப்பட்டது.
டெஸ்போட் தோட்டத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராகவே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்டத்தில் பணிபுரியும் 48 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர், கடந்த திங்கட்கிழமை (15) மாலை தோட்ட காரியாலயத்தில் வைத்து வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரால் தாக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் தொழிலாளர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர் ஏன் தொழிலாளியை தாக்கினார்? என்பது தொடர்பாக சரியான விளக்கம் கிடைக்காத காரணத்தினால் செவ்வாய்க்கிழமை (16) தோட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பதாதைகள் ஏந்தி தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொழிலாளர்கள் தமது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் ர் காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.