ஊடக சுதந்திரமுள்ள நாடுகள் வரிசையில் பின்நோக்கிச் செல்லும் இலங்கை

ஊடக சுதந்திரமுள்ள நாடுகள் வரிசையில் பின்நோக்கிச் செல்லும் இலங்கை

உலக ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வரிசைப்படுத்தலில் இலங்கை மிக வேகமாக பின்நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய புதிய வரிசைப்படுத்தலின் படி இலங்கை 146வது இடத்தை எட்டியுள்ளது. 2021ம் ஆண்டு 127வது இடத்தில் இருந்தது. இவ்வருடம் 19 இடங்கள் தள்ளி 146வது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் 180 நாடுகளை கொண்டு இத்தரப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. முதலாவது இடத்தை நோர்வே தக்க வைத்துக்கொண்டுள்ளது. மூன்றாம் இடத்தை டென்மார்க்கும் மூன்றாம் இடம் சுவீடனும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image