பொகவந்தவாலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது...
அரசுக்கு எதிராக பொகவந்தலாவை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.
பொகவந்தலாவை பகுதியில் உள்ள அனைத்து தோட்ட தொழிலாளர்களும் நேற்று (28) வியாழக்கிழமை பகல் பொகவந்தலாவை நகரின் மத்தியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வாழ்வதற்கு முடியாத நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளதாகவும் தமக்கு பெற்று கொடுப்பதாக கூறிய ரூபா 1000 வேதனத்தையும் பெற்றுக் கொடுக்காது தற்போது அத்தியவசிய பொருட்களின் விலையை பாரியளவில் உயர்த்தியுள்ளதால் தம்மால் மூன்று வேலை உணவை ஏனும் தமது குடும்பத்திற்கு பெற்றுக் கொடுக்க முடியாது போயுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
எனவே இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் உடனே பதவி விலக வேண்டும் எனவும், ஜனாதிபதி வேண்டும் எனவும், இதனை சரி செய்ய முடியாத இந்த அரசு உடனே பதவி துறக்க வேண்டும் என பதாகைகள் ஏந்தி கோசம் எழுப்பியவாரு கொட்டும் மழைக்கு மத்தியிலும் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு பொகவந்தலவை வர்த்தக சங்கத்தினரும் முழுமையான ஆதரவை பெற்றுக் கொடுத்துனர். பொகவந்தலாவை நகரின் அனைத்து வியாபார ஸ்தாபனங்ளையும் மூடியதுடன் அவர்களும் இந்த போராட்த்தில் இனைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.