மேலதிக கற்பித்தல் நேரம் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்கள் 139 நாட்களுக்கு தினமும் ஒரு மணித்தியாலம் மேலதிக கற்பித்தல் நேரத்துடன் கற்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் தரங்களை கற்பிப்பதற்கு அரை மணித்தியாலமே மேலதிக நேரம் தேவைப்படுகிறது.
தரம் 5 முதல் தரம் 13 வரை கூடுதலாக ஒரு மணிநேரம் கற்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், முஸ்லிம் பாடசாலைகளில் வெள்ளிக்கிழமைகளை சமய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதால் வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் மணிநேரத்தை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டால், அது தொடர்பான இழந்த நேரத்தை ஏனைய பாடசாலை நாட்களில் ஈடுசெய்யுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
மேலதிகமாக ஒரு மணித்தியால கற்பித்தல் நேரத்திற்காக ஓய்வு நேரத்திற்காக மாணவர்களுக்கு மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது அதிபரின் விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளப்படலாம்.
மேலதிக கல்விக் கால அட்டவணை மற்றும் ஆசிரியர் நியமனம் ஆகியவை அதிபரின் விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.