நேற்று முன்தினம் காலை 8 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் 17 சுகாதார தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
வேதனப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு, சுகாதார அமைச்சை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்தவர்கள் வீடுகளில்- அபிவிருத்தி உத்தியோகர்கள் ஆசிரியர் சேவைக்குஇதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.
இந்த நிலையில், சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, மார்ச் மாதம் முதலாம் திகதிக்குள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து, சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை கைவிட்டிருந்தனர்.
மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும்? ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுஎனினும், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க, சுகாதார அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இது 65 ஆயிரம் சுகாதார உத்தியோகத்தர்களின் பிரச்சினையாகும்.
இந்த நிலையில், இன்று காலை 8 மணிமுதல் 10 நாட்களுக்கு தங்களது போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.