பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு ஜனவரி மாத கொடுப்பனவு கிடைக்கவில்லை
இதுவரையில் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு ஜனவரி மாதத்திற்கான கொடுப்பனவு கிடைக்கப் பெறவில்லை என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின பிரதான செயலாளர் சந்தரன சூரிய ஆராச்சியினால், அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு நேற்று முன்தினம் (22) இது குறித்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2020 தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின்கீழ் இதுவரையில் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத மற்றும் நிரந்தர பணியிடம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுக்கு மாதாந்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
2022 ஜனவரி 13 ஆம் திகதி நியமனம் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் 2022.0401 நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் ஒரு தரப்பினருக்கு 2022ஆம் ஜனவரி மாத கொடுப்பனவு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
கண்டி, கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களின் பட்டதாரிகள் தங்களுக்கு 2021 டிசம்பவர் மாதத்தின் பின்னர் எந்தவொரு கொடுப்பனவும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், 20,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்க கிடைக்காமையால், அவர்கள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதுவரையில் நிரந்தர கடிதம் கிடைக்காத மற்றும் நிரந்தர பணியிட நியமனத்துக்கான கடிதம் கிடைக்கப்பெறாதமை காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி, அது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை அறிக்கை குறித்து
சும்பந்தப்பட்ட அனைத்து மாவட்ட செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று, இதுவரையில் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு கிடைக்கவில்லை
22 கம்பனிகள் 1000 ரூபா சம்பளத்தை வழங்குகின்றன - ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு