அவுஸ்திரேலியாவில் தசாப்த காலத்தின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய தொழில் கட்சி!

அவுஸ்திரேலியாவில் தசாப்த காலத்தின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய தொழில் கட்சி!

ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சியைச் சார்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவின் பிரதமராக தெரிவாகியுள்ளார்.

நேற்று (21) இடம்பெற்ற அவுஸ'திரேலிய பொதுத் தேர்தலில் அந்த நாட்டின் தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் (Anthony Albanese)  புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்கொட் மொரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தனி அல்பனிஸ் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவியிருந்தது.

அவுஸ்திரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மொத்தமாக உள்ள 151 இடங்களில் 76 இனை கைப்பற்ற வேண்டியது அவசியமாகும்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அந்தனி அல்பானிஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 இடங்களை கைப்பற்றியதுடன், 55 இடங்களை லிபரல் கட்சி வேட்பாளரான ஸ்கொட் மொரிசன் பெற்றுக்கொண்டார்.

15 இடங்களை சுயாதீன மற்றும் ஏனைய கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

கடந்த 2007, 2010, 2013 மிதலான ஆண்டுகளில் தொழில் கட்சி தொடர்ச்சியாக ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையில். 2022 ஆம் ஆண்டில் தொழில் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image