புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, 4,000 மைல்கள் தொலைவிலுள்ள ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான ஒப்பந்தத்தை முதல் முறையாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுடன் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் நிலையில், அவர்கள் ருவாண்டாவில் தங்க வைப்பது தொடர்பான ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் கையெழுத்திடவுள்ளார்.
இவை ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளுக்கு இந்த ஒப்பந்தம் பயத்தை ஏற்படுத்தும் என்றும் பிரித்தானிய அதிகாரிகள் நம்புகின்றனர்