இலங்கையில் C190 பிரகடனத்தின் முக்கியத்துவம்- பாராளுமன்றில் உரை

இலங்கையில் பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கு C190 பிரகடனம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தொடர்பில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன கவிரத்ன ஆற்றிய உரை வருமாறு

 நாங்கள் நேற்றைய தினம் நாங்கள் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினோம். உண்மையிலேயே அது பெயரளவில் மாத்திரமே என்று நான் கூறுகிறேன். இலங்கையில் நூற்றுக்கு 98 சதவீத எழுத்தறிவு வீதமும், உயர் சுகாதார சதவீதமும் இருந்தாலும்கூட தொழில் படையில் நூற்றுக்கு 35 சதவீதமும், அரசியலில் 5 சதவீதமும் என்று குறைந்த மட்டத்திலேயே பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கின்றது. ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் உயர் மட்டத்தில் இருக்கின்றது என்பதை கூற வேண்டும்.

கல்வித்துறையில் பெண்கள் உயர்மட்டத்தில் இருந்தாலும்கூட தொழில்வாய்ப்புக்காக பெண்களை ஆட்சேர்ப்பதில் ஆர்வம் இல்லாத நிலைமை இருக்கின்றது. குறிப்பாக மகப்பேறு விடுமுறையை வழங்குவதில் சில நிறுவனங்கள் குறிப்பாக தனியார் நிறுவனங்கள் என் விருப்பமின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் கூலி வேலைக்கு பெண்களை ஆட்சேர்ப்பதில் பாரிய ஆர்வம் உள்ளது.
ஏனெனில் அது குறைந்த சம்பளத்துக்கு வழங்கப்படும் வேலையாகும் அரசியலிலும் உயர் பதவிகளுக்கும் பெண்கள் வரும்போது அவர்களுக்கு தடையை ஏற்படுத்தும் நிலையை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

எனவே இலங்கையும் பங்காளராக உள்ள 1948 ஆண்டு மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்திற்கமைய, அனைத்து மனிதர்களும் சுதந்திரமாக பிறப்பதற்கு உரித்துடையவர்கள். அத்துடன் அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

அதேநேரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் பங்காளராக உள்ள இலங்கை, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

தற்போது நமது நாடு உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் 8 பிரகடனங்களிலும் கைச்சாத்திட்டுள்ளது. அதில் ஒன்று தான் C190 ஆகும். இதனூடாக பணியிடங்களில் வேலை செய்பவர்களுக்கு சம உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எமது நாட்டின் அரசியல் அமைப்பில் எந்த ஒரு நபரும், மாறுபட்ட விதத்தில் கவனிக்கப்பட கூடாது என்றும், எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டில் அவ்வாறு இடம்பெறுகின்றதா என்ற கேள்வி இருக்கின்றது.ஏனெனில் இது தொடர்பாக கடந்த காலங்களில் எமக்கு அனுபவம் இருக்கின்றது.

இலங்கையில் தற்போது அரசியலமைப்பு, குற்றவியல் தண்டனைச் சட்டம், சிவில் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், இலஞ்ச ஊழல் எதிர்ப்பு சட்டம், வீட்டு வன்முறை ஒழிப்பு சட்டம் முதலான பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஏதாவது ஒருவர் மாறுபட்ட விதத்தில் நடத்தப்படுவது அல்லது வேலை செய்யும் இடத்தில் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாக்குவது பாலியல் லஞ்சம் கோருதல் என்பன குற்றவியல் குற்றமாகக் கருதப்படுகின்றது. இன்னும் இந்த சட்டங்களின் மூலமாக வேலை செய்யும் உலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இயலாத நிலை இருக்கின்றது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி, ஜெனிவாவில் தொழிலாளர் சம்மேளனத்தின் 108வது மாநாட்டின்போது பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கு C190 பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இதனூடாக பணியிடத்தில் மாத்திரமன்றி பணி உலகத்தில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் என்பன தொடர்பில் முழுமையான வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரகடனத்திற்கு அமைய வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் என்பன ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளாகும் என்பதுடன், அச்சுறுத்தலும் மற்றும் மீள இடம்பெறக்கூடிய பிரதிபலன்கள், ஆண், பெண் சமநிலையுடன் தொடர்புடைய வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள், உடல், உள, பாலியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இந்தப் பிரகடனத்தில் வேலை உலகம் என்பது வரைவிலக்கணப்ப்படுத்தப்பட்டுள்ளது. நபர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு உள்ளே பொது மற்றும் தனிநபர் இடங்கள், ஓய்வெடுத்தல் மற்றும் சுகாதார பாதுகாப்பு இடங்கள், வேலை தொடர்பான தொடர்பாடல் நடவடிக்கைகள், தொழில்தருநரால் வழங்கப்படும் விடுதிகள், தொழிலுக்கும் தொழின்போதும், அதற்கு அப்பாலும் போக்குவரத்து என்ற பரந்த விடயங்கள் உள்ளன.
இந்தப் பிரகடனத்தின் மூலமாக அங்கத்துவ நாடுகள் வன்முறையை ஒழிப்பதற்கு ஒழுங்கு விதிகளை அமைத்துக்கொள்வதற்காக சேவை வழங்குனர்களும், ஊழியர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதன்மூலம் பணியிடத்தில் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கு பரிந்துரையாகியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன 2020 முதலாம் மாதம் 7 ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் ஒன்றை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளார். அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் பிரதமரின் கையொப்பத்துடன் கண்காணிப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ளது இதற்கு அப்பால் அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கவும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான தீர்மானம் இருக்கின்றபோதும், உயர் பதவிகளுக்கு செல்லும் போது பெண்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை நாங்கள் பார்க்கின்றோம். எனவே இந்தப் பிரகடனத்தை நிறைவேற்றுவதற்காக மகளிர் விவகார அமைச்சர், தொழில் அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு நான் கோருகின்றேன். அது தொடர்பில் இந்த சபையை தெளிவுபடுத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறும் நான் கூறுகின்றேன்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image